automobile
அடுத்த மாதம் மூன்று எஸ்யூவிகள் அறிமுகம்..!இது க்ரெட்டாவின் விற்பனையை காலி செய்யுமா..?
இந்திய மக்களிடையே தற்போது ட்ரெண்டாகி வருவது எஸ்யூவி ரக வாகனங்கள். இது இந்தியாவின் கரடு முரடான சாலைகளில் பயன்படுத்தவும் உயரமாகவும் இருப்பதன் காரணமாக மக்கள் இதனை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். எஸ்யூவி ரக விற்பனை இடத்தை முழுமையாக தக்க வைத்திருப்பது ஹூண்டாய் க்ரெட்டா. இதன் குறைந்த பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் திருப்தியாக்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்து இருப்பதால் மக்கள் இதனை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சந்தையில் இதன் போட்டியாளர் சிலர் இருந்தும் கரெக்டா விற்பனையில் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அதிக அளவில் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது இதற்கு கடுமையான போட்டியை உருவாக்குவதற்காக மூன்று புதிய மீட் சைஸ் எஸ்யூவிகள் வரவுள்ளது. அவைகள் கியாவின் செல்டோஸ் ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் போன்றவைகள் ஆகும்.
கியா செல்டோஸ் :
இந்தியாவில் கியா நிறுவனத்தின் கார்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெகு விரைவிலேயே அதன் விற்பனை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிட் சைஸ் எஸ்யூவியான செல்டோஸ் வெளியான நாள் முதல் நல்ல விற்பனையில் இருந்து வந்தது. தற்பொழுது இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் வகை அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் புதிய சிறப்பம்சமாக பெரிய சன் ரூஃப்,அட்டாஸ்(ADDS) வசதி முற்றிலும் குளிரூட்டப்பட்ட இருக்கைகள்,360 டிகிரி கேமரா இரண்டு வித வண்ணங்களில் டாஷ்போர்டு டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மேலும் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற தோற்றத்துடன் புதிய செல்டோஸ் வருகிறது.
ஹோண்டா எலிவேட் :
ஹோண்டா கார்கள் மக்களிடையே அதிக நம்பிக்கையை பெற்றுள்ளது. அதன் நீடித்துளைக்கும் தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு காரணமாக மக்களை நம்பிக்கையை பெற்றது. தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி மற்றும் அமேஸ் கார்கள் நல்ல விற்பனையில் இருந்தாலும் ஹோண்டா விடம் ஒரு எஸ்யூவி ரக கார் இல்லாதது ஒரு குறையாகவே காணப்பட்டது. அதை நிறைவு செய்ய அடுத்த மாதம் ஹோண்டாவின் எலிவேட் கார் அறிமுகமாக உள்ளது. இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் சிவிடி கியர் பாக்ஸ் கொண்டு வருகிறது. உட்புறத்தில் 10 இன்ச் அளவில் பெரிய இன்போடைமென்ட் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் வடிவிலான ஸ்பீடோமீட்டர்,பெரிய சன்ருப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி,க்ரோஸ் கண்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது.
சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ் :
சிட்ரோயன் நிறுவனம் சி3 என்னும் ஆரம்ப நிலை கார் கொண்டு இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கியது. வளர்ந்து வரும் கார் நிறுவனமான சிட்ரோயன் தற்பொழுது எஸ்யூவி ரக காரர்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. சி 3 போன்றே இந்த எஸ்யூவையும் உருவ வடிவமைப்பை கொண்டிருக்கும். அடுத்து வர இருக்கும் விடுமுறை நாட்களில் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது 109 bhp பவரையும் 190nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.