Connect with us

insurance news

போனஸ்களை அள்ளி தரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிக்க இத பாருங்க..

Published

on

insurance logo

இந்தையாவில் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காப்பீடு திட்டங்களின் மூலம் நாம் செலுத்தும் தொகையை நமக்கு தேவையான நேரத்தில் காப்பீடு அளிப்பவரிடம் இருந்து பெற்று கொள்ள முடியும். இவ்வாறான காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது போனஸ் அளிப்பதும் உண்டு. இதன்படி தற்போது சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான போனஸ்களை தருகிறது. அவற்றை பற்றி இப்போது காணலாம்.

டாடா ஏ.ஐ.ஏ லைஃப் இன்சூரன்ஸ்(TATA AIA Life Insurance):

tata aia life insurance

tata aia life insurance

இந்த நிறுவனம் தற்போது 2023 நிதியாண்டில் இதன் வாடிக்கையாளர்களுக்கு 1183 கோடி ரூபாயை போனஸாக அளிப்பதற்காக ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 37% அதிகமாகும். 2022 நிதியாண்டில் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.861 கோடி போனஸுக்காக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இதன்படி 7,49,229 வாடிக்கையாளர்கள் இதற்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.

பிஎன்பி மெட்லைஃப்(PNB Metlife):

pnb metlife

pnb metlife

இந்த நிறுவனம் ரூ.768.6 கோடியை தனது 5,52,000 வாடிக்கையாளர்களின் போனஸ் கணக்கில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 29% அதிகமாகும். இந்த தொகையே இந்த நிறுவனத்தின் மிக அதிகமான தொகை என பிஎன்பி மெட்லைஃப் இன்சூரன்ஸ் MD&CEO.ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்(Max Life Insurance):

max life insurance

max life insurance

2023 நிதியாண்டில் இந்த நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு போனஸ்க்காக ஒதுக்கிய தொகை ரூ.1604 கோடியாகும். மேலும் இந்த நிறுவனம் தொடர்ந்து 21 ஆண்டுகள் போனஸ் வழங்கி வருகிறது. மேலும் இந்த ஆண்டு போனஸ் தொகை கடந்த ஆண்டை காட்டிலும் 8% அதிகம் ஆகும்.

கோடக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ்(Kotak Mahindra Life Insurance):

kotak mahindra life insurance

kotak mahindra life insurance

இந்த நிறுவனம் தனது 6,50,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.840 கோடியை போனஸ்க்காக ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2022 நிதியாண்டை விட 24% அதிகம் ஆகும். மேலும் இது இந்த நிறுவனத்தில் 22வது ஆண்டு போனஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *