latest news
கூகுள் ஆப்-இல் 15 நிமிட ஹிஸ்ட்ரியை மட்டும் அழிக்க முடியும்.. எப்படி தெரியுமா?
கூகுள் ஆப் பயன்படுத்தும் போது, சமயங்களில் அதன் சமீபத்திய சர்ச் ஹிஸ்ட்ரியை மட்டும் அழிக்க முடியுமா என்ற எண்ணம் ஏற்படலாம். தனிப்பட்ட காரணங்கள் அல்லது குறிப்பிட்ட சில பிரவுசிங் ஹிஸ்ட்ரியை மட்டும் அழிக்க வேண்டும் என்ற தேவை உருவாகும். என்ன காரணம் என்ற போதிலும், கூகுள் இதனை செய்வதற்காக வசதி ஒன்றை வழங்கி வருகிறது.
அந்த வகையில் கூகுள் வழங்கும் வசதியை கொண்டு பயனர்கள் 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்ட்ரியை நொடிகளில் அழித்துவிட முடியும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். எனினும், இவ்வாறு செய்வதற்கு முன்பு, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நேரம்: கூகுள் வழங்கும் புதிய அம்சம் கொண்டு கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே ஹிஸ்ட்ரியை அழிக்க முடியும். இதனால் ஹிஸ்ட்ரியை அழிக்கும் போது கவனமாக செயல்படுவது அவசியம் ஆகும்.
சாதனம்: இந்த அம்சம் கூகுள் ஆப் கொண்ட மொபைல் சாதனத்தில் மட்டும் இயங்கும். இது மற்ற பிரவுசர்கள் மற்றும் சாதனங்களில் இயங்காது. இதனை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.
கூகுள் ஆப்-இல் கடைசி 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்ட்ரியை அழிப்பதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் ஆப் – மொபைல் அல்லது டேப்லெட்-இல் கூகுள் ஆப் திறந்து, கூகுள் அக்கவுன்ட்-இல் சைன் இன் செய்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ப்ரோஃபைல் பிக்சர் – செயலியின் வலதுபுற மேல்பக்கமாக இருக்கும் ப்ரோஃபைல் படத்தை க்ளிக் செய்து, அக்கவுன்ட் செட்டிங்ஸ் பக்கத்தை திறக்க வேண்டும்.
கூகுள் அக்கவுன்ட் – மெனுவில் மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுன்ட் (Manage your google account) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது கூகுள் அக்கவுன்ட்-இன் செட்டிங்ஸ் பக்கம் திறக்கும்.
பிரவைசி மற்றும் பெர்சனலைசேஷன் – அக்கவுன்ட் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள பிரைவசி அன்ட் பெர்சனலைசேஷன் (Privacy & Personalisation) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
மை ஆக்டிவிட்டி – இனி மை ஆக்டிவிட்டி (My Activity) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது, உங்களது சமீபத்திய சர்ச் ஹிஸ்ட்ரி மற்றும் ஆக்டிவிட்டி திரையில் தோன்றும்.
டெலீட் ஹிஸ்ட்ரி – கீழ்புறமாக ஸ்கிரால் செய்து, கடைசி 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்ட்ரி ஆக்டிவிட்டி ஆப்ஷனை தேடவும். இனி மோர் (More) ஆப்ஷன் அருகில் செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டெலீட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.