govt update news
வெயில் காலத்தில் இரவு நேரங்களில் ஏ.சி உபயோகிப்பவரா நீங்கள்..இதோ உங்களுக்கான செய்தி..இனி மின்சாரக்கட்டணம் அதிகமாகப்போகுது..
அடிக்கும் வெயிலுக்கு ஏசி உபயோகிக்காதவர்கள் என யாரையுமே பார்க்க இயலாது. அனைத்து வீட்டிலும் ஏசி என்ற ஒரு பொருள் உள்ளது. பெரும்பாலும் பகலை விட இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்குவதற்கு ஏசி என்பது தேவைப்படுகிறது. பொதுவாக ஏசி உபயோகிக்கும் பொழுது நமது மின்சாரக்கட்டணம் அதிகம் வருவது இயல்பே. ஆனால் தற்போது மத்திய அரசு மின்சாரக்கட்டணத்தில் ஒரு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் நமது ஏசிக்கான மின்சாரக்கட்டணம் முன்பு இருந்ததை விட 10 முதல் 20% அதிகரிக்கபோவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பகல் நேரங்களில் நாம் ஏசியினை உபயோகிக்கும் பொழுது அதற்கான விலை குறைவுதான். ஏனென்றால் பகலில் சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரம் எடுப்பதால் இதன் விலை குறைவாகவே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்..
மின்சார சட்டம் 2020ன் படி இரவு நேரங்களில் நாம் ஏசி உபயோகிப்பதனால் இதன் ஒரு யுனிட்கான விலை அதிகம். மேலும் மத்திய அரசானது தற்போது Time of the Day(ToD) என்ற புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதன்படி பகல் நேரங்களில் நாம் சோலார் எனர்ஜியை சார்ந்திருப்பதனால் நமது மின்சாரக்கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும் எனவும் இரவு நேரங்களில் அதிகமாகவும் வசூலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். எனவே இரவு நேரங்களில் ஏசியினை உபயோகிப்பதனால் நமது மின்சாரக்கட்டணம் 1000 ரூபாய்க்கு அதிகமாகவே வரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கொண்டுதான் வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குறிப்பிட்டது என்னவென்றால் தமிழகத்தில் இந்த விதி நுகர்வோர்களுக்கு பொருந்தாது எனவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகே இதனை பற்றி யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.