Connect with us

latest news

ரூ. 24 மட்டுமே.. வோடபோன் ஐடியாவின் தரமான சம்பவம்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

Published

on

Vi-Featured-img

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு இருக்கும் மிக கடுமையான போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனமும் தனிப்பட்ட முறையில், தங்களின் ரிசார்ஜ் திட்டங்களை அடிக்கடி மாற்றி வருகின்றன. ரிசார்ஜ் திட்டங்கள் மட்டுமின்றி, பழைய ரிசார்ஜ் திட்ட பலன்களை மாற்றியமைத்து, கூடுதல் பலன்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் டெலிகாம் நிறுவனங்கள் போட்டியிடுட்டு வருகின்றன.

Vodafone-Idea-1

Vodafone-Idea-1

அந்த வரிசையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய பயனர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இரண்டு ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. ரூ. 24 மற்றும் ரூ. 49 விலைகளில் கிடைக்கும் இரு ரிசார்ஜ் திட்டங்களும் அதன் விலைக்கு ஏற்ற பலன்களை வழங்குகின்றன. இவை ‘சூப்பர் ஹவர்’ மற்றும் ‘சூப்பர் டே’ என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்களும் வி மொபைல் செயலி, வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரிசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே திட்ட பலன்கள் :

Vi-Rs-24-Offer

Vi-Rs-24-Offer

ரூ. 24 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா சூப்பர் ஹவர் ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் ஒரு மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா பெற முடியும். தினசரி டேட்டா அளவு கடந்தவர்கள் இந்த ரிசார்ஜ் மூலம் கூடுதல் டேட்டா பெற முடியும்.

Vi-Rs-49-Offer

Vi-Rs-49-Offer

ரூ. 49 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா சூப்பர் டே ரிசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 6 ஜிபி வரையிலான மொபைல் டேட்டாவினை வழங்குகிறது. இதற்கான வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். வோடபோன் ஐடியாவின் சூப்பர் ஹவர் மற்றும் சூப்பர் டே ரிசார்ஜ் திட்டங்களில் ரிசார்ஜ் செய்ய பயனர்கள் ஏற்கனவே, வேறு ஏதேனும் ரிசார்ஜ் திட்டத்தில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

குறைந்த விலையில் கிடைக்கும் இரண்டு ரிசார்ஜ் திட்டங்களும் ஆட்-ஆன் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதில் பயன்பெறுவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் ரிசார்ஜ் திட்டத்தினை ஆக்டிவேட் செய்திருப்பது அவசியம் ஆகும். ஆட்-ஆன் பிரிவில் கிடைப்பதால், ரூ. 24 மற்றும் ரூ. 49 விலையில் கிடைக்கும் வோடபோன் ஐடியா ரிசார்ஜ் திட்டங்களில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

google news