automobile
அட்ராசக்க..2 மணி நேரம் சார்ஜ் போட்டா 200கிலோமீட்டர் போகுமா!..அதென்ன பைக்..
மிக சிறந்த ரேஞ் தரும் இந்த பைக் மிக சிறந்த அம்சங்களையும் பெற்றுள்ளது. இதெல்லாம் பார்த்து வெளிநாட்டு பைக்-னு நினைச்சிடாதிங்க. ஓபென் ரோர்(Oben Rorr) என்று பெயரிடப்பட்ட இந்த பைக்-ஐ ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric) என்கிற பெங்களூருவை சேர்ந்த ஒரு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம்தான் இந்த பைக்-ஐ உற்பத்தி செய்துள்ளது.
இந்த பைக் 8 கிலோவாட் பவர் வெளியிடும் IPMSM மோட்டாரினால் இயக்கப்படுகிறது. இந்த பைக்கில் 4.4kwh லித்தியம்-அயன்(Li-ion) பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது ஒரு முறை ரீசார்ச் செய்தால் 200கிலோமீட்டர் செல்லும் திறன் பெற்றது. இந்த பைக்-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர். 0-40கீமீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டி சீறீப்பாயும் திறன் பெற்றது. டியூப்லெஸ் டயர், இருசக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக் பொறுத்தபட்டுள்ளது.
ரோர் பைக்-ல் இடம்பெற்றுள்ள மற்ற சிறப்பம்சங்கள்:
- புஸ் பட்டன் ஸ்டார்ட்,
- டிஜிடல் ட்ரிப்மீட்ட்ர், டிஜிடல் ஸ்பீடொமீட்டர், டிஜிடல் ட்ரிப்மீட்டர், மற்றும் டிஜிடல் கடிகாரம்.
- LED-ஹெட்லைட், டெயில்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள்.
- கம்பைன் ப்ரேக்கிங் சிஸ்டம்,
- டிஸ்ப்லே, ஜீபீஎஸ், ரிமோட் டயக்நாஸ்டிக்ஸ்,
- ட்ரைவர் அலெர்ட், ஜியோ ஃபென்சிங்.
ட்ரைவ் மோட்- வேகம்:
- ஈகோ -மணிக்கு 50 கீமீ
- சிட்டி -மணிக்கு 70கீமீ
- ஹாவோக்- மணிக்கு 100கீமீ
ரோர் பைக் வாரண்டிகளை பார்த்தால் இன்னும் சிறப்பானது. மோட்டாருக்கு 3 வருட வாரண்டி, பேட்டரிக்கு 3வருடம்/50,000 கீமீ, இலவசமாக 3 முறை சர்வீஸ் போன்ற பல வசதிகளை இந்நிறுவனம் தருகிறது.
இத்தனை சிறப்பம்சங்களை கொண்டு ஒரே வேரியண்டாக வெளிவரும் ஓபென் ரோர் பைக்-ன் சென்னை எக்ஸ்-ஸோரூம் விலை ரூ 1,49,999/- மட்டுமே. இவ்வளவு சிறப்பான பைக்கை மிஸ் பன்னிடாதீங்க. இதைவிட மலிவான, தரமான பைக் விற்பனையில் தற்சமயம் இல்லை. அதனால் கிளம்புங்க புக் பன்னுங்க.. ட்ரைவ் போங்க, பணத்தையும் மிச்சம் பண்ணுங்க..