latest news
போதும் போதும்-னு சொல்ல வைக்கும் 5ஜி வேகம்.. மீடியாடெக் உடன் கூட்டு சேர்ந்த சாம்சங்..!
சாம்சங் நெட்வொர்க்ஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து 5ஜி அப்லோடு வேகத்தில் புதிய மைல்கல் எட்டியுள்ளன. இரு நிறுவனங்கள் இணைந்து தென் கொரியாவில் உள்ள சாம்சங் ஆய்வகம் சுவோனில் தீவிர டெஸ்டிங்-ஐ நடத்தின. இது இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த மைல்கல் 2CC CA மற்றும் MIMO தொழில்நுட்பம் கொண்ட C பேன்ட்-இல் 5ஜி ஸ்டான்ட்-அலோன் நெட்வொர்க் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. சாம்சங் நெட்வொர்க்ஸ் தனது C-பேன்ட் பிரமான்ட MIMO ரேடியோக்கள், விர்ச்சுவலைஸ்டு டிஸ்ட்ரிபியூடெட் யூனிட் மற்றும் 5ஜி கோர் உள்ளிட்டவைகளை டெஸ்டிங்கில் ஈடுபடுத்தியது.
மீடியாடெக் நிறுவனம் இதற்காக முற்றிலும் புதிய M80 சார்ந்த CPU சிப்செட், மூன்று ஆன்டெனாக்கள் அடங்கிய உபகரணத்தை வழங்கியது. இவை ஒருங்கிணைந்து அதிகபட்சமாக 363Mbps எனும் அப்லோடு வேகத்தை எட்டின. இந்த தொழில்நுட்ப புதுமை, எதிர்கால நுகர்வோர் சாதனங்கள் உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இவை பல்வேறு தளங்களில் மிக முக்கிய அம்சமாக விளங்கும், நெட்வொர்க் அப்லோடு வேகத்தை அதிகப்படுத்தும். புதிய நெட்வொர்க்குகள் மூலம் கிடைக்கும் அதீத அப்லோடு வேகம், அதிக ரெசல்யூஷனில் நேரலை வீடியோ ஸ்டிரீமிங், வீடியோ கான்ஃபரன்சிங், மல்டி-பிளேயர் கேமிங் போன்ற அனுபவங்கள் தற்போது இருப்பதை விட பலமடங்கு வேகமாகவும், சீராகவும் இருக்கும்.
நுகர்வோர் சாதனங்களில் புதிய திறன் பெற்று, மைல்கல் எட்டியவது பெரும் மகிழ்ச்சி மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருப்பதாக சாம்சங் நெட்வொர்க்ஸ் பிரிவின் தொழில்நுட்ப தீர்வுகள் துறை தலைவர் டொங்வூ லீ தெரிவித்து இருக்கிறார். அதிவேக அப்லோடு ஸ்பீடு புதிய திறன்களை உருவாக்குவதோடு, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும். அதி நவீன தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதில் சாம்சங் மற்றும் மீடியாடெக் தொடர்ந்து பணியாற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று டொங்வூ லீ மேலும் தெரிவித்தார்.
நெட்வொர்க் பிரிவு மட்டுமின்றி சாம்சங் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் தொழில்நுட்ப துறையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பும் பயன் அடையும் வகையில், கூட்டணி அமைத்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களில் சிப்செட் வழங்கப்பட்டு இருப்பதும், சாதனங்கள் தொடர்பான பிரிவில்அஉடன் கூட்டணி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.