latest news
இந்த மேட்டர்ல இவங்கதான் டாப்..ஜியோவின் அடுத்த அதிரடியான திட்டம்..அப்போ ஏர்டெல் நிலைமை?..
அனத்து டெலிகாம் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு பல ஆஃபர்களை மக்களுக்கு அளிக்கின்றன. ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை பெருக்குவதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தங்களின் ரீசார் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வழங்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு கலக்கலான திட்டத்தினை தற்போது ஜியோ நிறுவனம் அளித்துள்ளது. இதன்படி நாம் நமக்கு ஒரு நாளைக்கு உள்ள டேட்டாவில் எல்லை முடிந்தபின் அதிகப்படியான டேட்டா வேண்டும் என நினைத்தால் இந்த திட்டத்தினை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
ரூ.19க்கான டேட்டா பூஸ்டர் திட்டம்:
இந்த பிளானில் நாம் ரூ. 29க்கு ரீசார்ஜ் செய்தால் நமக்கு 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதன் வேலிடிட்டி நாம் ஏற்கனவே எந்த ஒரு பிளானில் ஆக்டிவாக இருக்கிறோமோ அந்த பிளான் முடியும் வரை இதன் வேலிடிட்டியும் இருக்கும்.
ரூ.29க்கான டேட்டா பூஸ்டர் திட்டம்:
ரூ.29க்கு இந்த திட்டத்தினை ரீசார்ஜ் செய்து கொள்வதின் மூலம் நமக்கு 2.5ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இதன் வேலிடிட்டியும் மேலே கூறியது போலவே நாம் ஏற்கனவே வைத்துள்ள பிளான் முடியும் வரை இருக்கும்.
ஏர்டெலை விட இதில் என்ன சிறப்பம்சம்?:
- ஏர்டெலின் ஒரு நாள் பூஸ்டர் பிளானான ரூ.19 மற்றும் ரூ.29 ஆகிய இரு திட்டங்களின் வேலிடிட்டி 24மணி நேரம் அதாவது ஒரு நாள்தான். ஆனால் ஜியோவின் இந்த இரு திட்டங்களிலும் நாம் ஏற்கனவே உள்ள பிளானின் காலம் முடியும் வரை இதையும் நாம் அனுபவித்து கொள்ளலாம்.
- அதனைபோல் ஏர்டெலின் பிளானான் ரூ.19க்கான டேட்டா பூஸ்டர் திட்டத்தில் நமக்கு 1ஜிபி டேட்டாவும் ரூ.29க்கான திட்டத்தில் வெறும் 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால் ஜியோவின் இந்த திட்டக்களின் நமக்கு அதை விட அதிகமாகவே டேட்டாக்கள் கிடைப்பது இதன் சிறப்பாகும்.