Cricket
குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுங்க…ஆதரவாக குரல் கொடுத்த அனில் கும்ப்ளே.!!
இந்திய டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். குல்தீப் ஏற்கனவே விளையாடிய எட்டு டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முக்கிய உறுப்பினராக தன்னை நிரூபித்துள்ளதால், குல்தீப் தனது திறமைகளை மிக நீண்ட ஆட்டத்தில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் எனவும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகதிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அனில் கும்ப்ளே ” டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் கடந்த சில போட்டிகளில் அருமையாக செயல்பட்டுள்ளார். தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் கிட்டத்தட்ட ஒரு போட்டியில் 3 விக்கெட்கள், 5 விக்கெட்கள் என தன்னுடைய திறமைகளை நிறுத்துபித்து காட்டியுள்ளார். என்னை பொறுத்தவரை இந்திய அணியில் ஸ்பின்னர்கள் குறைவாக இருப்பது வருத்தமாக இருக்கிறது.
குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் .அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதால் அவர் கண்டிப்பாக நமது அணியில் இருக்க வேண்டும். குல்தீப் யாதவ் போன்ற லெக் ஸ்பின்னர்கள் அணியில் இருந்தால் அதுவும் ஒரு வகையில் அணிக்கு பக்க பலமாக இருக்கும். இப்போது நம்மளுடைய அணியில் இருக்கும் ஸ்பின்னர்களை நான் குறைகூறவில்லை.
அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அருமையாக பந்து வீசினார்கள் அஸ்வின் பல சாதனைகளை படைத்தார் அதற்கு எல்லாம் என்னுடைய வாழ்த்துக்கள் பந்து வீச்சை போலவே அவர்கள் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களை போலவே, குல்தீப் யாதவை அணியில் அவர்களுடன் சேர்த்து வைத்திருக்க வேண்டும்” எனவும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.