Connect with us

Cricket

விமர்சனங்களுக்கு தக்க பதிலடி! ரோஹித், ஜெய்ஷ்வாலை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்.!

Published

on

வெஸ்ட் இண்டியன்ஸ்க்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் , அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது . அந்த வெற்றிக்கு முக்கிய காரணமே ஜெய்ஸ்வால் , ரோஹித் சர்மா , விராட் கோலி , தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஏனென்றால் அந்த போட்டியில் அவர்கள் மூன்று பேருமே மிகவும் அருமையாக விளையாடினார்கள். குறிப்பாக ரோஹித் ஷர்மா  ஜெய்ஷ்வால் சதம் அடித்தனர் . விராட் கோலி 76 ரன்கள்  அடித்து சதத்தை தவறவிட்டார் இதனை எடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்பஜன் சிங்  3 பேரின் பேட்டிங்கை பற்றி மனம் திறந்து பாராட்டி உள்ளார் . இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங்  சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ள ஜெய்ஸ்வால் அருமையாக விளையாடி வருகிறார் . அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது.

Yashasvi Jaiswal

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதவீதத்தை அவர் தவறவிட்டாலும் கூட அவர் இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் விளையாடுவார் என நான் நம்புகிறேன். அந்த அளவிற்கு அவருடைய திறமை அவருடைய ஆட்டத்தில் நன்றாக தெரிகிறது. அவர் இதையும்  தாண்டி இன்னும் கடினமான பல முயற்சிகளை எடுக்க வேண்டும். அவருக்கு இப்போதுதான் எதிர்காலமே தொடங்கியுள்ளது. அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவர் இன்னும் மிகப்பெரிய ஆளாக வருவார்.

Rohit Sharma

Rohit Sharma

அவரைப் போல ரோஹித் ஷர்மா கடந்த சில  ஆண்டுகளாக சரியாக ஆடவில்லை என்ற விமர்சனங்கள் வந்தது ஆனால் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய சதம் விளாசி  அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி  கொடுத்துள்ளார். அதைப்போல விராட் கோலியும் 76 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் சதத்தை மட்டும் தவற விட்டுவிட்டார். ரசிகர்களைப் போலவே எனக்கும் அந்த கவலை இருக்கிறது.

அடுத்த சில போட்டிகளில் விராட்கோலியும்  சதம் அடிப்பார் என நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியா இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று விடும் என நான் நினைக்கிறேன் எனவும்  ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.  மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஜூலை 20ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

google news