Connect with us

Cricket

யாருனா இருக்கீங்களா? பயமா இருக்கு.. மனம் திறந்து பேசிய ப்ரித்வி ஷா!

Published

on

Prithvi-Shaw-featured-img1

தற்கால பேட்ஸ்மேன்களில் அதிக திறமைசாலியாக விளங்கி வரும் ப்ரித்வி ஷா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷா, சமீப காலங்களில் ஆட்டம் அவரை எந்த வகை கிரிக்கெட்டில் தேர்வு செய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Prithvi Shaw

Prithvi Shaw

கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் நார்தாம்டன்ஷயர் அணிக்காக விளையாட ப்ரித்வி ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முன்னதாக அன்டர் 19 உலக கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த ப்ரித்வி ஷா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தற்போது அவரின் சர்வதேச கிரிக்கெட் பற்றி, தனது கருத்துக்களை பகிரவே அச்சம் தெரிவித்துள்ளார்.

prithvi shaw

prithvi shaw

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ப்ரித்வி ஷா, உடற்தகுதியை நிரூபித்து, அதிக ரன்களை உள்ளூர் கிரிக்கெட்டில் சேர்த்த பிறகும் வாய்ப்புகள் இன்றி திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறேன், என்று தெரிவித்து இருக்கிறார். இது குறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது,

“என்ன காரணத்திற்காக, நான் விலக்கப்பட்டேன் என்று என்னிடம் யாரும் கூறவே இல்லை. சிலர், உடற்தகுதியை காரணமாக கூறினர். ஆனால், நான்கு இங்கு வந்து, என்.சி.ஏ.-வில் அனைத்து வகையான பயிற்சிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன். இதன் பிறகு டி20 அணியில் இடம்பிடித்தேன். ஆனால், வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் அனைத்தையும் கடந்து முன்னோக்கி செல்ல வேண்டும். என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் யாரிடமும் சண்டையிட முடியாது.”

Prithvi Shaw

Prithvi Shaw

“ஒரு மனிதராக, நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். மக்கள் என்னை பற்றி நிறைய கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது. நான் எப்படிப்பட்டவன் என்பதும் தெரியாது. எனக்கு நண்பர்களே இல்லை. நண்பர்களை உருவாக்கிக் கொள்வது எனக்கு பிடிக்காது. இந்த தலைமுறையினர் இடையே இது தான் நடைபெற்று வருகிறது. உங்களின் கருத்துக்களை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது.”

“தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால், இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனது கருத்துக்களை வெளிப்படுத்தவே, எனக்கு அச்சமாக இருக்கிறது. எப்படியோ இவை அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகிவிடுகிறது. எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனக்கென இருக்கும் சில நண்பர்களிடமும், என்னால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது.” என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *