Cricket
அஷ்வினை புகழ்ந்து தள்ளிய அனில் கும்ப்ளே! அப்படி என்ன சொன்னார் தெரியுமா.?
ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டதை அடுத்து, இந்திய அணிக்கு மீண்டும் ஒரு காவியமாக திரும்பியுள்ளார். ஏனென்றால், நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தி பல சாதனைகளை படைத்திருந்தார்.
இந்த நிலையில் அஷ்வினை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அஷ்வின் பேட்ஸ்மேனின் மனதுடன் விளையாடுகிறார். இந்த திறமை பெரிதாக பலருக்கும் வராது. ஆனால், அஷ்வினுக்கு வந்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் பந்துவீசிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது.
அன்று அவர் வீசிய எல்லா பந்துகளுமே மிகவும் அருமையாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு இளம் வீரர் எல்லா பந்துகளும் ஒரே மாதிரியாக வரும் என்று நினைத்தபோது, அஷ்வின் ஒரு பந்து வீச்சில் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். வரும் போட்டிகளிலும் அவருடைய ஆட்டம் மிகவும் அருமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அவருடைய அடுத்த அடுத்த ஆட்டங்களை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனவும் அஷ்வினை புகழ்ந்து பேசியுள்ளார்.
மேலும், நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிக நடைபெற்ற முதல் டெஸ்டில் அஷ்வின் இரண்டு இன்னிங்ஸில் 12 விக்கெட் எடுத்ததன் மூலமும் பல சாதனைகளையும் படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால், இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த சுழற் பந்துவீச்சாளர் என்ற சாதனையை மொத்தமாக 709 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.