Connect with us

health tips

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா…? அப்படின்னா இதை அப்படியே சாப்பிடுங்க

Published

on

”சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி… சுறுசுறுப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் தினமும் ஓடி ஓடி உழைத்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறியாக ஒரு மூலையில் போய் முடங்கி விடக்கூடாது.

என்ன தான் இருந்தாலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் சோம்பல் இருக்கத் தான் செய்யும். எப்போதும் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்னா ரொம்ப சிம்பிள் தான். இதைப் படிங்க என்ன செய்யலாம்னு தெரியும்.

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லக்கூடிய பழம் தக்காளி. இதை நாம் அன்றாடம் காய்கறி வகைகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுகிறோம். இந்தப் பழத்தில் ஏராளமான மருத்துவக்குணங்களும் உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:

மிக மிக குளிர்ச்சியைத் தரக்கூடியது. சைவம், அசைவம் என இரண்டிலுமே முக்கியப் பங்கு வகிக்கிறது.

சாம்பார், ரசம், சட்னி இவற்றில் மறக்காமல் இடம்பிடித்து விடும் தக்காளி. உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சரும அழகிற்கும் ஏற்றது.

வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

மாவுச்சத்து குறைவாக இருப்பதால் தக்காளியை சுகர் நோயாளிகள் கூட சாப்பிடலாம்.

Tomato

சிலர் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்வர் அல்லது கிரிக்கெட் விளையாடி விட்டு வருவர். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஒரு துண்டு தக்காளியை எடுத்து முகத்தில் மசாஜ் செய்தால் போதும். கருப்பாக உள்ள இடங்கள் பளிச்சென்று நிறம் மாறும். முகமும் மென்மையாக இருக்கும்.

உடல் வறட்சி அடையாமல் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். தக்காளியைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்கள் கண்டிப்பாக தக்காளி பழத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது 20 சதவீதம் புராஸ்டேட் நோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

ரத்த சோகை, கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.

Tomato 3

தக்காளியைப் பச்சையாக சாப்பிட உடல் சுறுசுறுப்பாகிறது. தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுக்கிறது.

இதில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது.

உடலில் ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் தக்காளியை வையுங்க. இது ஆன்டி செப்டிக்காகவும் செயல்படும்.

 

google news