Connect with us

Cricket

ஹர்மன்பிரீத் கவுர் கொஞ்சம் Manners-ஒட நடந்திருக்கலாம்.. வேதனையை வெளிப்படுத்திய வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா!

Published

on

Nigar-Sultana-Joty-Featured-img

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதின். தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் இருந்தன. இதையடுத்து, மூன்றாவது மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடின.

இந்த போட்டியில் பல்வேறு அதிரடி சம்பவங்கள் அரங்கேறின. டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில், அம்பயரிங் சரியாக இல்லை, அடுத்தமுறை இங்கு வரும் போது இதற்கு தயார் நிலையில் நாங்கள் வருவோம் என்று ஹர்மன்பிரீத் கவுர் கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் தான் ஆட்டமிழந்ததும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவராக ஹர்மன்பிரீத் கவுர் ஸ்டம்ப்களை பேட் கொண்டு கடுமையாக அடித்தார்.

WODI-IndvsBan

WODI-IndvsBan

ஹர்மன்பிரீத் கவுர் நடந்து கொண்ட விதம் பற்றி வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் நிகர் சுல்தானா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,

“இது முழுக்க முழுக்க அவரின் பிரச்சனை. நான் இதில் எதையும் செய்ய முடியாது. ஒரு வீரராக, அவர் கொஞ்சம் மரியாதையாக நடந்து கொண்டிருக்கலாம். என்ன நடந்தது என்று நான் கூற முடியாது, ஆனால் குழு புகைப்படம் எடுக்கும் இடத்தில் எனது அணியுடன் அங்கு இருப்பது எனக்கு சரியாக தோன்றவில்லை. அங்கு சூழல் சரியாக இல்லை. இதனால் தான் நாங்கள் திரும்பி சென்றுவிட்டோம்.”

 

“கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதை கொண்ட விளையாட்டு ஆகும். அவர் அவுட் ஆகாத போது, அம்பயர்கள் அவருக்கு அவுட் கொடுக்க மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட் அம்பயர்களே இந்த போட்டிக்கும் அம்பயரிங் செய்தனர். அவர்கள் நல்ல அம்பயர்கள் தான். ரன் அவுட் மற்றும் கேட்ச் முறையில் விழுந்த விக்கெட்களுக்கு அவர்கள் (இந்திய அணி) என்ன சொல்வார்கள். எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அம்பயர்களின் முடிவே இறுதியானது. நாம் ஏன் அப்படி நடந்து கொள்ளவில்லை,” என்று தெரிவித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரை மருஃபா அக்தர் வீசினார். இந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியா சார்பில் ஒரு விக்கெட் கைவசம் இருந்தது. சிறப்பாக பந்துவீசிய மருஃபா இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை சமனில் முடித்தார். இதன் மூலம் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.

google news