Connect with us

Cricket

2024 ஐ.பி.எல்.-இல் ரிஷப் பந்த்.. இஷாந்த் ஷர்மா கருத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..!

Published

on

Ishant-Sharma-Rishabh-Pant-Featured-Img

இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மன் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கினார். பயணத்தின் போது, தனது கார் மிகவும் கோரமான விபத்தில் சிக்கியது. இதையடுத்து ரிஷப் பந்த் தீவிர சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகிறார். மே 2023 மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரிஷப் பந்த் தற்போது உடற்பயிற்சி மேற்கொள்ள துவங்கி இருக்கிறார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் இடம்பெறாத ரிஷப் பந்த் உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க முடியாத சூழலில் உள்ளார். ரிஷப் பந்த் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது பற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் அளித்து இருக்கும் பதில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து இஷாந்த் ஷர்மா கூறியதாவது..,

Ishant-Sharma-Rishabh-Pant

Ishant-Sharma-Rishabh-Pant

“இது சிறிய காயம் இல்லை என்ற காரணத்தால், ரிஷப் பந்த்-ஐ அடுத்த ஐ.பி.எல். தொடரிலும் நம்மால் காண முடியாது என்றே நான் நினைக்கிறேன். இது மிகப் பெரிய விபத்து. அவர் இப்போது தான் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியை துவங்கி இருக்கிறார். இது மட்டுமின்றி மேலும் நிறைய தடைகள் உள்ளன. அவை விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டருக்கு அவ்வளவு எளிமையான காரியம் இல்லை.”

“இதில் நல்ல விஷயம் என்னவென்றால், அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை. அவருக்கு இரண்டாவதாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருந்தால், தற்போது இருப்பதை விட மேலும் தாமதம் ஏற்பட்டு இருக்கும். தற்போது தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார், இதனால் இந்த உலக கோப்பையை அவர் நிச்சயம் தவற விடுவார், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு அவர் தயாராகிவிட்டால், சிறப்பாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

Ishant-Sharma-Rishabh-Pant 1

Ishant-Sharma-Rishabh-Pant 1

எதுவாயினும், ரிஷப் பந்த் மீண்டும் களத்தில் இறங்குவது இந்திய அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். கடந்த ஐ.பி.எல். தொடரில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியில் இருந்து இரண்டாவது இடம் பிடித்தது.

இந்திய அணியை பொருத்தவரை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பந்த் இடத்தை இஷான் கிஷன் கிட்டத்தட்ட பிடித்துக் கொண்டார், ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தவில்லை.

கே.எஸ். பரத் நீக்கப்பட்டது மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. அந்தவகையில் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 தோல்விக்கு பிறகு, இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனை அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட வைக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *