Connect with us

Cricket

தல-க்கே இவ்வளவு தானா? எம்.எஸ். டோனியின் மாத சம்பளம் – குழப்பத்தில் ரசிகர்கள்..!

Published

on

MS Dhoni Featured Img

சர்வதேச கிரிக்கெட்டில் தனி பிரான்டாக உருவெடுத்திருப்பவரும், தலைசிறந்த கேப்டன்களில் ஒருவருமான எம்.எஸ். டோனி இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தான் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதிக கோப்பைகளை பெற்றுக் கொடுத்து, வெற்றிகர கேப்டனாக விளங்கி வருகிறார்.

42-வயது கிரிக்கெட் வீரரின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக பலமடங்கு அதிகரித்துவிட்டது. எனினும், 2012 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனியின் மாத வருமானம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எம்.எஸ். டோனியின் பழைய அபாயின்ட்மென்ட் லெட்டர் இணையத்தில் மீண்டும் வலம்வர துவங்கி இருக்கிறது.

MS Dhoni

MS Dhoni

2017 வாக்கில் முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி பகிர்ந்து கொண்ட தரவுகளில், எம்.எஸ். டோனியின் மாத வருமானம் ரூ. 43 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தரவுகளில் சி.எஸ்.கே. கேப்டன் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். 2023 போட்டியில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. 2023 ஐ.பி.எல். இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் கடைசி பந்தில் வெற்றியை தட்டி பறித்தது.

MS Dhoni Salary

MS Dhoni Salary

அடுத்த சீசனில் விளையாடுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தனக்கே உரித்தான பானியில் டுவிஸ்ட் வைத்து, பதில் அளித்து இருக்கிறார் எம்.எஸ். டோனி. அதன்படி சி.எஸ்.கே. ரசிகர்களுக்காக மற்றொரு சீசன் விளையாட விரும்புகிறேன், எனது உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் இதை நிச்சயம் செய்வேன் என்று தெரிவித்தார்.

இதுபற்றிய முடிவை எம்.எஸ். டோனி வரும் மாதங்களில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் சி.எஸ்.கே. அணி டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் புதிய வீரர்களை சேர்ப்பது, அணியை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news