Connect with us

Cricket

டோனி ஹீரோவா நடிப்பாரா? யாரும் எதிர்பார்க்கல.. நறுக்குனு பதில் அளித்த சாக்‌ஷி!

Published

on

Dhoni-Sakshi-Featured-Img

எம்.எஸ். டோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தலைசிறந்த மிடில்-ஆர்டர் பேட்டர், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான கேப்டன், ஐ.பி.எல். தொடரிலும் வெற்றிகர கேப்டன் என்று பல்வேறு பெருமைகளை சேர்த்து வைத்திருப்பவர் எம்.எஸ். டோனி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது.

அடுத்த சீசனிலும் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.எஸ். டோனி, தனது உடல் வலிமை ஒத்துழைக்கும் பட்சத்தில், ரசிகர்களின் அளவு கடந்த அன்புக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்து இருந்தார். இது ஒருபுறம் இருக்க எம்.எஸ். டோனி மற்றும் சாக்‌ஷி இணைந்து “டோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்” எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினர்.

Dhoni-Sakshi

Dhoni-Sakshi

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படம் “எல்.ஜி.எம்.” நாளை (ஜூலை 28) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எம்.எஸ். டோனி மற்றும் சாக்‌ஷி இணைந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “எம்.எஸ். டோனி கதாநாயகனாக நடிப்பதை நாங்கள் எதிர்பார்க்கலாமா?” என்ற கேள்வி சாக்‌ஷியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து சாக்‌ஷி கூறியதாவது, “அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன். இது நடக்கும் பட்சத்தில், அது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். ஏதேனும் நன்றாக இருந்தால், அதை அவர் நிச்சயம் செய்வார். அவர் ஏற்கனவே பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு கேமராவை பார்த்து வெட்கப்பட மாட்டார்.”

Dhoni-Sakshi-1

Dhoni-Sakshi-1

“அவருக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியும். அவர் கேமராவுக்கு முன் 2006 ஆம் ஆண்டில் இருந்து நடித்துக் கொண்டு வருகிறார். நல்ல கதையம்சம் எதுவும் இருந்தால், அவர் நிச்சயம் அதை செய்வார். மாறாக நான் அவருக்காக ஏதேனும் கதையை தேர்வு செய்ய வேண்டும் என்றால், நான் ஆக்‌ஷன் படத்தையே தேர்வு செய்வேன். அவர் எப்போதும் ஆக்‌ஷனில் தான் இருப்பார்,” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.எஸ். டோனிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி, ஏராளமான முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை எம்.எஸ். டோனிக்கு தெரிவித்து மகிழ்ந்தனர்.

google news