Connect with us

Cricket

வீரர்களே ஐபிஎல் உங்களை கெடுத்துவிடும்! முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து!

Published

on

ரிஷ பண்ட், கேஎல் ராகுல், பும்ரா, சுரேஷ் ஐயர், உள்ளிட்ட இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களுக்கு பயிற்சியையும் இந்திய அணி நிர்வாகம் கொடுத்து வருகிறது. இதற்கிடையில், இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சமீபத்திய  பேட்டி ஒன்றில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து பேசி உள்ளார்.

Kapil-Dev

Kapil-Dev

இது குறித்து பேசி அவர் “பும்ப்ரா இன்னும் காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டும் உள்ளாரா  என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கு காயம் சரியாகி விட்டது என்ற செய்திகள் வருவதை நான் பார்த்திருக்கிறேன் . ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பவில்லை என்றால் இந்திய அணிக்கு அது ஒரு இழப்பாக இருக்கும். அவர் விரைவில் இந்திய அணியில் சேர வேண்டும்.

Jasprit-Bumrah-1

Jasprit-Bumrah-1

என்னைப் பொறுத்தவரை என்னிடம் கேட்டீர்கள் என்றால் பும்ராவுக்கு  பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யாமல் இந்திய அணி நிர்வாகம் நேரத்தை வீணடிக்கிறது என்றுதான் நான் சொல்வேன். நான் விளையாடிய காலகட்டத்தில் எனக்கு பெரிதாக காயங்கள் ஏற்படாதவாறு கடவுள் என்னை பார்த்துக் கொண்டார் என நான் நம்புகிறேன். கடவுளின் அருளால் எனக்கு பெரிதாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Jasprit-Bumrah

Jasprit-Bumrah

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு நல்ல கிரிக்கெட் தொடர் தான் ஆனால் அந்த கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது வீரர்கள் லேசான காயங்கள் வந்துவிட்டாலும் உடனடியாக ஓய்வு எடுத்து விடுகிறார்கள். அது என்னை பொருத்தவரை தவறு. சில சமயங்களில் ஐபிஎல் உங்களை கெடுத்துவிடுகிறது. இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் 10 மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அது அவர்களுக்கு ஒரு பணி சுமையாக இருக்கும்.

எனவே, அதனை ஆராய்ந்து அதற்கு என்ன செய்யலாம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆராய வேண்டும் என கபில் தேவ்  கூறியுள்ளார். மேலும்,  இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மூன்று ஒரு நாள் போட்டி ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது . இதில் , இரண்டு டெஸ்ட் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் நாளை மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

google news