Connect with us

latest news

பிஎஸ்என்எல் 4ஜி – 1 லட்சம் சைட்களை இன்ஸ்டால் செய்ய மந்திரி சபை ஒப்புதல்

Published

on

BSNL

இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்று, நாளை என்று பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை வழங்குவதற்கான அனுமதியை மத்திய மந்திரி சபை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நாடு முழுக்க 1 லட்சம் சைட்களை அமைத்து பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் உருவாக்கப்பட இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. டிசிஎஸ் தலைமையில் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் பணிகள் நடைபெறவுள்ளன. முன்னதாக பிப்ரவரி மாதம் நாடு முழுக்க 1 லட்சம் சைட்களை அமைக்க பரிந்துரைக்கப்பட்டு இருந்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவு வெளியாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.

BSNL

BSNL

புதிய உத்தரவின் படி நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இடையேயான கூட்டணி மூலம் இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி செயல்படுத்தப்பட இருக்கிறது. டாடா குழமத்தை சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம் 1 லட்சம் சைட்களுக்கு தேவையான 4ஜி உபகரணங்களை வழங்க இருக்கிறது.

மும்பையை தலைமையிடமாக கொண்டிருக்கும் டிசிஎஸ் நிறுவனம் இதற்காக ரூ. 24 ஆயிரத்து 556 கோடியை செலவிட இருக்கிறது. இதில் நெட்வொர்க் உபகரணங்கள் மட்டும் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட இருக்கிறது. இத்துடன் மூன்றாம் தரப்பு பாகங்கள் மற்றும் பத்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ஒப்பந்தங்களின்படி, டிசிஎஸ் நிறுவனம் கொள்முதல் ஆணை பெற்று மிகமுக்கிய உபகரணங்களை ஒரே ஆண்டிற்குள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. ரேடியோ உபகரணங்கள் 18 முதல் 24 மாத காலத்திற்குள் வினியோகம் செய்யப்படவுள்ளது. திட்டமிட்ட இலக்குகளின் மூலம் 4ஜி உள்கட்டமைப்புகள் சீராக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

BSNL

BSNL

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் கடந்த ஆண்டில் இருந்து தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கில் அதிகபட்சம் 10 மில்லியன் அழைப்புகளை வெற்றிகரமாக கையாண்டது. இதன் மூலம் நெட்வொர்க் உள்கட்டமைப்பின் தரம் மற்றும் நம்பகத்தன்மை சீராக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அதிவேக 4ஜி சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல் பயணத்தில் 1 லட்சம் சைட்களுக்கான அனுமதி மிகப் பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த சைட்களை அமைப்பதன் மூலம் நாடு முழுக்க சீரான கனெக்டிவிட்டி வழங்க முடியும்.

google news