tech news
இனி உங்க ஸ்க்ரீனை எல்லாரும் பாக்கலாம்..! வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை உறுதிப்படுத்திய ஜுக்கர் பெர்க்..!
செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்அப் ஆனது பயனர்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு புதிய அம்சங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, ஸ்க்ரீன் ஷேரிங் என்ற புதிய அம்சத்தை வெளியிடப் போவதாக அறிவித்தது.
அதன்படி, இந்த அம்சத்தை பீட்டா பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் சோதனைக்காக வெளியிட்டது. தற்பொழுது இந்த அம்சத்தின் சோதனை ஆனது முடிவடைந்த நிலையில், அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர் பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அம்சத்தில் பயனர்கள் தங்களது மொபைல் ஸ்கிரீனை வாட்ஸ்அப்பில் வீடியோ காலில் இருப்பவர்களுக்கு ஷேர் செய்ய முடியும். அதாவது, கூகுள் மீட் மற்றும் ஜூம் (Zoom) போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் பயனர்கள் தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும்.
வாட்ஸ்அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் செய்வதற்கு பயனர்கள் வீடியோ கால் செய்தவுடன், இடதுபக்கம் கீழ்முனையில் உள்ள ஸ்கிரீன் ஷேர் ஐகானைத் தேர்வு செய்து தங்களது திரையில் இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம். ஸ்க்ரீன் ஷேரிங் தொடங்கியவுடன் திரையில் நாம் பார்க்கும் அனைத்தையும் நம்முடன் காலில் இருப்பவரும் பார்க்கமுடியும்.