india
சுங்கச்சாவடி கட்டணம் விலை உயர்வு!.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!..
சுங்கச்சாவடிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வை அமுல்படுத்துவது வழக்கம்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது சுங்கச்சவாடிகளுக்கு கட்டண உயர்வை அமுல்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2ம் தேதி இரவு முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வந்திருக்கிறது.
சென்னை அருகேயுள்ள அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கச்சவாடியில் இன்று நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வு அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி வரை அமுலில் இருக்கும். அதன்பின் புதிய கட்டணம் அமுல்படுத்தப்படும்.
இதையடுத்து, கார் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு ரூ.1 முதல் 68 வரையும், இலகு ரக வணிக வாகனங்களுக்கு 2 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னை – மாமல்லபுரம் இடையே போக்குவரத்து அதிகரித்திருப்பதால் 2018ம்ன் வருடமே அங்கு நான்கு வழிச்சாலை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.