Connect with us

india

பிரதமர் திட்டத்தின் கீழ் 3 கோடி பேருக்கு வீடு!.. விண்ணப்பிப்பது எப்படி?….

Published

on

house

இந்தியா முழுவதும் தகுதிவாய்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. 2015-16ம் வருடம் முதல் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்த்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் 4.21 கோடி வீட்டுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை, சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு வசதி, வீட்டு குழாய் இணைப்பு வசதி போன்ற அடிப்படையான வசதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மற்ற திட்டங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கூடுதலாக 3 கோடி கிராம மற்றும் நகர்புற மக்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவெடுத்திருக்கிறது.

இது தொடர்பாக விண்ணபிப்பது எப்படி என்பதை விரைவில் அரசு தெரிவிக்கும் என கருதப்படுகிறது. அதேபோல், ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போல சேவை மையங்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இதுபற்றிய விண்ணப்பங்களை பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

google news