latest news
தமிழகத்தில் மின் உயர்வு கட்டணம் அமுலுக்கு வருகிறதா?.. மின்வாரியம் சொல்வது என்ன?..
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், மின் வாரியம் இதை மறுத்து வருகிறது.
அதேநேரம் 100 யூனிட்டுக்கு மேல் போய்விட்டால் இவ்வளவு, 200 மீட்டருக்கு மேல், 300, 400ம் 500 மீட்டருக்கு மேல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மின்சாரம் கணக்கிடப்பட்டு வருகிறது. இதனால் 400 மற்றும் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் அதிகமான மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயரப்போவதாக செய்திகள் கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மீண்டும் மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சிலர் கோபமாக பதிவிட்டனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த செய்தியை தமிழக மின்சார வாரியம் மறுத்துள்ளது.
மின்சார கட்டணம் உயர்த்தப்பவுதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி. அதை நம்ப வேண்டாம் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்திருக்கிறது.