Connect with us

health tips

பிராண முத்ராவை செய்தால் இவ்வளவு பலன்களா?

Published

on

Prana Muthra

நம் உடலினை உறுதிப்படுத்த நம் முன்னோர்கள் பல எளிய வழிகளை நமக்கு சொல்லித் தந்து சென்றுள்ளார்கள். அவ்வழியில் நடந்தாலே போதும். நோயற்ற வாழ்வை வாழ்ந்து விடலாம். அப்படி அவர்கள் சொன்ன ஒரு வழி தான் யோகாசனம்.

அந்த யோகாவில் பிராண முத்ரா என்று ஒன்று உள்ளது. இது ஒரு அற்புதமான ஆற்றலைத் தரும் முத்திரை. கை விரல்களைப் படத்தில் காட்டியது போல செய்தால் பொதும். நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. வாங்க என்னன்னு பார்ப்போம்.

Prana Muthra2

Prana Muthra2

பிராண முத்ராவை சரிவரச் செய்தால் நம் உடலுக்குப் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. என்னென்ன பலன்கள் உண்டாகின்றன என பார்ப்போமா…

இந்த முத்திரை பயிற்சியானது வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்தும்.

நரம்பியல் கோளாறு, உடல் பருமன், ரத்த அழுத்தம், தைராய்டு ஆகியவற்றை ஒரே சீராகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும்.

இந்த முத்திரை செய்யப்படும் போது நினைவாற்றல் அதிகரிக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை கட்டுக்குள் கொண்டு வர இந்த முத்ரா பெரிதும் உதவுகிறது.

உடலுக்கும், மனதுக்கும் ஒப்பற்ற ஆற்றலையும் இது தருகிறது.

google news