Connect with us

india

நீக்கப்பட்ட கருணை மதிப்பெண்கள்… மீண்டும் நீட் தேர்வு… தொடர் குளறுபடிகளால் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!..

Published

on

நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நீட் மதிப்பெண்களை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்பு எல்லாருக்கும் கிடைக்கவும், எந்த வித அரசியல் தலையீடும் இருக்க கூடாது எனக் கூறப்பட்டு 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் இருந்தும் அதில் தமிழ் மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை கூறி திமுக, அதிமுக கட்சிகள் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனால்  இந்த வருடம் இந்தியாவே இந்த தேர்வு முடிவுகள் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். கடந்த வருடங்களில் முழுமதிப்பெண் எடுப்பதே கடினம். அதிலும் எடுத்தாலும் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே எடுத்த நிலையில் இந்த வருடம் 67 பேர் மதிப்பெண் எடுத்திருந்தனர். மேலும், ஹரியானாவின் ஒரு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முழுமதிப்பெண் எடுத்திருந்தனர்.

அதுமட்டுமல்லாது, வினாத்தாள் கசிந்ததாக புகார் இருக்கும் ராஜஸ்தானில் 11 பேர் முழுமதிப்பெண் எடுத்திருந்தனர். மேலும் நெகட்டிவ் மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்று இருப்பது சாத்தியமானது இல்லை. ஏனெனில், தவறான மதிப்பெண் என்றால் கேள்விக்கான மதிப்பெண் 4 மற்றும் 1 மைனஸ் மதிப்பெண் என ஐந்து மதிப்பெண் கழியும். இதனால் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், தேர்வறையில் நேரம் குறைபாடு ஏற்பட்டதாக 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் நீட் ரிசல்டை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று நடந்த விசாரணையில், தேர்வு முகமை கூறிய கருணை மதிப்பெண்கள் பதிலை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதை தொடர்ந்து, 1563 மாணவர்களின் கருணை மதிப்பெண்ணை நீக்கி மீண்டும் அவர்களுக்கு நீட் தேர்வு வைக்க அறிவுறுத்தி இருக்கிறது. இதில் தேர்வு எழுத விரும்பாத மாணவர்களின் கருணை மதிப்பெண் இல்லாத பழைய மதிப்பெண்ணே தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் 23ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு 30ந் தேதி ரிசல்ட்டை வெளியிடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குவைத் கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது எப்படி? 43 இந்தியர்களின் உயிரை காவு வாங்கிய அதிகாலை அகோரம்…

google news