latest news
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை!.. போக்குவரத்து துறை அதிரடி!..
தமிழக போக்குவரத்து துறை பல கெடுபிடிகளை விதித்தாலும் ஆம்னி பேருந்துகள் அதை சரியாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் அரசு தரப்பும் விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு மாநிலத்தில் ஓடும் பேருந்துகளில் வெளிமாநிலங்களின் பதிவெண் இருக்க கூடாது என்பதி விதி.
ஆனால், வெளிமாநில பதிவெண் கொண்ட பல ஆம்னி பேருந்துகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பல ஊர்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் தீபாவளிக்கு முன்பு வெளிமாநில ஆம்னி பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தடை விதித்திருந்த்து. ஆனால், இன்னும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சில மாதங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. எனவே, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.
வெளிமாநில பதிவெண்ணை தமிழ்நாடு பதிவெண்ணாக மாற்ற பல சிக்கல்கள் இருப்பதாகவும், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தாமதம் ஏற்படுவதாகவும், ஏற்கனவே அதற்கு முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பதிவெண்களை மாற்ற முடியவில்லை எனவும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் சொல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து போக்க்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஆம்னி பேருந்து சங்கத்தை சேர்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நாளை (ஜூலை 14) முதல் வெளிமாநில பதிவு கொண்ட எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறிவிட்டார். எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.