Connect with us

india

திருப்பதி கோவிலில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை.. சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை..

Published

on

chandrababu

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இருப்பதுதான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திராவிலிருந்து மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பலரும் செல்வதுண்டு. இலவச தரிசனத்திற்கு ஒரு நாள் ஆகும் அளவுக்கு எப்போதும் இங்கே கூட்டம் அலை மோதும். திருப்பதி கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான லட்டு மிகவும் புகழ் பெற்றது. இதை வாங்குவதற்காகவே பலரும் அங்கு செல்வதுண்டு.

அதேநேரம், திருப்பதி தேவஸ்தானத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடப்பதாக புகாரும் உள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார்.

சந்திராபு நாயுடு கெடுபிடிகளுக்கு பெயர் போனவர். எல்லாவற்றிலும் அதிரடியாக களம் இறங்குவார். 4வது முறையாக ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருடன் அவரின் குடும்பத்தினரும் சென்றிருந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திருப்பதி மலையின் புனிதத்திற்கு கேடு நிகழ்ந்திருக்கிறது. நிர்வாக சீர்திருத்தத்தை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்தே துவங்கவிருக்கிறேன்’ என கூறினார். முதல்வரின் இந்த பேச்சி திருப்பதி தேவஸ்தான வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

google news