Connect with us

latest news

அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!

Published

on

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார்.

நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷாவிடம் தமிழிசை பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் தமிழிசையிடம் அமித் ஷா கடுமை காட்டுகிறார். தமிழிசையிடம் அவர் ஏதோ கேள்வி கேட்க, அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். ஆனால், அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக கண்டிப்பது போன்ற தொனியில் அமித் ஷா பேசுகிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மீறி செய்தியாளர்களிடம் பேசியதற்காக தமிழிசையை அமித் ஷா கண்டித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மேலும், ஆந்திராவில் இருந்து சென்னை திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் கேள்வியெழுப்பியபோது, பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனாலும் ‘எல்லாம் ஓகேவா?’ என செய்திகாளர்கள் கேட்டதற்கு ‘ஓகேதான்’ என கை விரலை உயர்த்தி காட்டி சிரித்துகொண்டே சென்றுவிட்டார்.

இந்தநிலையில், அமித் ஷா உடனான சந்திப்பில் நடந்தவைகள் குறித்து தமிழிசை விளக்கமளித்திருக்கிறார். `2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திராவில் சந்தித்தேன். தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்து அவர் என்னிடம் கேட்டறிந்தார்.

நான் அதுகுறித்து அவரிடம் விளக்கினேன். மேலும், இருந்த குறைந்தபட்ச நேரத்திலேயே அரசியல் மற்றும் தொகுதி சார்ந்த பணிகளை தீவிரப்படுத்துமாறு எனக்கு அவர் அறிவுரை வழங்கினார். அந்த சம்பவம் குறித்து தேவையில்லாத விவாதங்கள் எழுந்த நிலையில், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

google news