Connect with us

tech news

ஆபாச படத்துக்கு அனுமதி: X தளத்தை முடக்கிடுவோம்.. இந்தோனேசியா எச்சரிக்கை

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனம் எக்ஸ் (முன்பு டுவிட்டர்). இதன் உரிமையாளரான எலான் மஸ்க் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதன் விதிகளில் மாற்றம் செய்தார். இந்த மாற்றம் காரணமாக எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை பார்க்க முடியும்.

இந்தோனேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் புடி ஏர் செட்யாடி, எக்ஸ் நிறுவனம் நாட்டின் 2008 ஆபாச பட சட்டத்திற்கு உட்பட மறுக்கும் பட்சத்தில் எக்ஸ் தளத்தை நாட்டில் முடக்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் 2008 ஆபாச பட சட்டம், நாட்டிற்குள் ஆபாச படங்களுக்கு முழுமையான தடை விதித்து இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், தனது தளத்தில் போதுமான தகவல் எச்சரிக்கைகளுடன் ஆபாச படங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

ஒருவர் தனது சொந்த நம்பிக்கைகள், விருப்பம் மற்றும் அனுபவங்களை கொண்டு தகவல் உருவாக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தரவுகள், அனிமேஷன் வடிவிலான ஆபாச படங்களுக்கு அனுமதி உண்டு.

எக்ஸ் நிறுவனம் எங்கள் நாட்டின் சட்டத்திட்டத்திற்கு உட்படாத பட்சத்தில் அவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன், எக்ஸ் நிறுவனத்திற்கு இந்தோனேசியா சார்பில் கருத்து கேட்கப்படும்.

எனினும், இந்த விவகாரத்தில் எக்ஸ் நிறுவனம் மற்றும் எலான் மஸ்க் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்தோனேசியாவில் ஆபாச படங்களை முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு விமியோ என்ற தளத்தில் ஆபாச படங்கள் இடம்பெற்று இருந்ததை அடுத்து, இந்தோனேசியாவில் விமியோவுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. இதே போன்று டம்ப்ளர், ரெடிட் மற்றும் இம்கர் என பல தளங்களுக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

google news