காதலுக்கு கண் மட்டுமில்லை. வயதும் இல்லை என நிரூபித்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம். சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருபவர் லீ. இவருக்கு வயது 80. அந்த முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வருபவர் சியாஃபாங். இவருக்கு வயது 23.
துவக்கத்தில் இருவரும் நட்பாக பழகி இருக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவரின் மனதிலும் காதல் மலர துவங்கியது. எனவே, அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார் லீ. ஆனால், இதை சியாஃபாங்கின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், லீ-யின் மீது கொண்ட உறுதியான காதலால் பெற்றோரை உதறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார் சியாஃபங். அதோடு, லீயை எளிமையான முறையில் திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு முதியோர் இல்லத்தில் இருக்கும் பலரும் ஆசிர்வாதம் செய்தனர்.
ஒருபக்கம், அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் லீயை வயித்தெரிச்சலுடன் பார்த்து வருகின்றனர். காதல் என வந்துவிட்டால் அது எல்லா தியாகமும் செய்யும் என்பதை சியாஃபாங் நிரூபித்திருக்கிறார். இவர்களின் புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளியாகி திருமணமாகாத 90 கிட்ஸ்களுக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறது.