latest news
காருக்குள் நீச்சல் குளம்… முக்கிய யூடியூபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து… ஏங்க இப்படி?
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அடைய தொடங்கியதில் இருந்தே யூடியூபர்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஓவர் பாப்புலரிட்டி கிடைத்த பின்னர் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவு இல்லாமல் வேறுவிதமாக செல்கிறது.
தமிழ்நாட்டில் ஓவர் ஸ்பீட் மற்றும் ரோட்டில் சாகசம் என தொடர்ந்து செய்து கொண்டு வந்த டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு அவர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவிலும் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சஞ்சு டெக்கி என்ற கேரளாவை சேர்ந்த யூடியூபர் கடந்த மாதம் காரில் நீச்சல் குளம் செட் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டார். ஆவேஷம் திரைப்பட பாணியில் அந்த நீச்சல் குளத்தில் இருந்துக்கொண்டு காரை ஓட்டி இருக்கின்றனர். கார் நெரிசலான சாலைகளில் செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் காரின் ஓட்டிநர் இருக்கை, இஞ்சின் உள்ளிட்டவற்றில் தண்ணீர் செல்ல காரை நிறுத்தி அதை சுத்தம் செய்து தண்ணீரை வெளியேற்றியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து மோட்டார் வாகனத்துறை அவரை விளக்கம் கொடுக்க மே 29ந் தேதி வருமாறு கூறி இருந்தது. இதையடுத்து, சஞ்சுவின் விளக்கத்தை ஏற்காத மோட்டார் வாகனத்துறை இன்று சஞ்சு மற்றும் அவர் நண்பர் சூர்யநாராயணனின் லைசன்ஸை ரத்து செய்து இருக்கிறது.
சஞ்சு தன்னுடைய நிறைய வீடியோக்களில் போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் விரும்பினால் இந்த நடவடிக்கை மீது மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. சஞ்சுவின் நண்பர்கள் சிலர் மீது ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.