india
ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்… வளைத்து பிடித்த வாடிக்கையாளர்… அடப்பாவிங்களா?!!
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் குளிர்பானங்களை நாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அச்சமயங்களில் ஜூஸ் விற்பனையும் அளவுக்கதிகமாகவே நடந்து வரும். ஆனால் ஆரோக்கியம் என நினைத்து குடிக்க இருந்த ஜூஸில் எச்சில் துப்பிய சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 121-ல் இருக்கும் கர்ஹி என்ற இடத்தில் இருக்கும் ஜூஸ் கடைக்கு சதீஷ் பாட்டியா சென்று இருக்கிறார். ஓவர் வெயிலால் தாகத்தில் இருந்தவர் ஜூஸ்களை ஆர்டர் செய்திருக்கிறார். அங்கு இருந்த ஷம்ஷெட் ஜூஸ் தயாரித்து இருக்கிறார்.
ஷம்ஷெட் ஜூஸை தயாரிக்க தொடங்கியதும் தூரத்திலிருந்து அவர் செய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜூசை தயாரித்த ஷம்ஷெட் இறுதியில் அதை எச்சில் துப்பி ஸ்பூனால் கலக்க இதை பார்த்த சதீஷ் பாட்டியா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனால் ஷம்ஷெட்டும் அது குறித்து கேட்க அவரும் பதிலுக்கு வாக்குவாதம் செய்திருக்கிறார். இருவருக்குள்ளும் தகராறு முற்றியது.
இதனால் கோபமான சதீஷ் பாட்டியா போலீசில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடைக்காரர் ஷம்ஷெட் மீது 270வது சட்டப்பிரிவு, 153ஏ(1)பி மற்றும் 34வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஷம்ஷெட் மற்றும் அக்கடையில் வேலை செய்து வந்த சோனு என்பவரையும் காவல்துறை கைது செய்து இருக்கிறது. இந்த கைது நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: இவிஎம் மெஷினை ஹேக் செய்ய முடியும்… எலான் மஸ்க் பற்ற வைத்த வெடி… அதிர்ச்சியான இந்தியா கூட்டணி..