latest news
வருகிற 18ம் தேதி கனமழை!.. வானிலை மையம் அறிவிப்பு!..
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல இடங்களிலும் மழை, வெயில் மாறி மாறி அடித்து வருகிறது. 5 நாளைக்கு மழை வரும், 5 நாளைக்கு வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் புதுவித செய்தி குறிப்புகளை வெளியிட்டு வந்தது. நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்தது.
நள்ளிரவு 2 மணிக்கு துவங்கிய மழை அதிகாலை வர நிற்கவில்லை. இதனால், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சுற்றி வந்தது. அதில் ஒரு விமானம் பெங்களூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒருபக்கம், தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் மழை பற்றிய ஒரு செய்தியை இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வருகிற 22ம் தேதி சனிக்கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி அந்த ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.