Connect with us

latest news

வேற லெவல் சலுகைகள் – இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கூகுள் பிக்சல் 7a

Published

on

Google-Pixel-7a

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த பிக்சல் 7a ஸ்மார்ட்போன் நேற்று இரவு அமெரிக்காவில் நடைபெற்ற கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் நிறுவனத்தின் முதல் டேப்லட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது. வழக்கம் போல கீநோட் உரையுடன் துவங்கிய கூகுள் I/O நிகழ்வில் முதற்கட்டமாக மென்பொருள் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகின.

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அறிவிப்புகள் நேற்றைய நிகழ்வில் முக்கியத்துவம் பெற்று இருந்தன. அதன்படி ஜெனரேடிவ் ஏ.ஐ. திறன் கொண்ட சர்ச் லேப்ஸ் சேவை, கோடிங், சர்வதேச இமேஜிங் திறன் உள்பட ஏராளமான திறன்களை கொண்ட கூகுள் பார்ட் சேவை சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர கூகுள் மேப்ஸ், போட்டோ எடிட்டர் போன்ற சேவைகளில் ஏ.ஐ. பயன்பாடு பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது.

இதனிடையே பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விலையை பொருத்தவரை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a போன்றே, புதிய 7a விலையும் ரூ. 43 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், பிக்சல் 7a ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Google Pixel 7a

Google Pixel 7a

அறிமுக சலுகை விவரங்கள்:

பிக்சல் 7a ஸ்மார்ட்போன் வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை, ஹெச்டிஎப்சி வங்கி கார்டு பயன்படுத்தினால் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். இதுதவிர பழைய பிக்சல் சாதனம், தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேன்ஜ் செய்து ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.

புதிய பிக்சல் 7a மட்டுமின்றி கூடவே ஃபிட்பிட் இன்ஸ்பயர் 2 வாங்கும் போது, ஃபிட்பிட் சாதனத்தை ரூ. 3 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இதுதவிர பிக்சல் பட்ஸ் 2 மாடலை வாங்கும் போது ரூ. 3 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். பிக்சல் 7a வாங்குவோர் ஒரு ஆண்டிற்கு இலவச ஸ்கிரீன் டேமேஜ் ப்ரோடக்‌ஷன் பெற்றுக் கொள்ளலாம்.

Google Pixel 7a

Google Pixel 7a

பிக்சல் 7a அம்சங்கள்:

கூகுள் பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHD+OLED HDR ஸ்கிரீன், 2400×1080 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் டென்சார் G2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் IP67 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, என்எப்சி, 4385 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

google news