Connect with us

health tips

சர்க்கரை நோயால் அவதியா? கவலையை விடுங்க… பக்கவிளைவே இல்லாத மருந்து இதுதாங்க..!

Published

on

Sugar patient

இன்று எங்கு பார்த்தாலும் சர்க்கரை நோயாளிகளாகத் தான் இருக்கிறார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் எந்த நோயாக இருந்தாலும் உங்களக்கு பிபி இருக்கா? சுகர் இருக்கா என்று தான் கேட்கிறார்கள்.

அதனால் சர்க்கரை நோய் இருந்தால் அசட்டையாக இருந்து விடாதீர்கள். அதன் ஆரம்பத்தில் இருந்தே மருந்து சாப்பிட்டு வாங்க. அதுவும் நாட்டு மருந்தாக இருந்தால் மிக மிக நல்லது. கொஞ்சம் குணமாக நாளானாலும், பக்கவிளைவு இல்லாம பூரணமா குணமாகிவிடலாம்.

சர்க்கரை நோய்க்கு மருந்தாக உள்ள ஒரு நாட்டு மருந்தின் பெயர் தேன் காய். இது நாட்டு மருந்து கடைகள் மற்றும் ஆன்லைனில் இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்.

பெயரைக் கேட்டதும் இனிப்பாக இருக்கும் என்றால் அது தான் தவறு. இது பாகற்காயைவிட கடுமையான கசப்பாக இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதற்கு மேலே ஒரு ஓடு இருக்கும். அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

இந்த தேன்காயை காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதை நுணுக்கி தண்ணீரில் கலந்தும் பருகலாம். இதை தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டாயம் குறையும். இதை சாப்பிட்டாலே போதும். நீங்கள் மற்ற எந்த உணவு கட்டுப்பாடோ எடுக்க தேவையில்லை.தேன் காய் கிடைக்கவில்லை என்றால், தேன் கனி வில்லை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அது சிறிய உலர் திராட்சைபோல் இருக்கும். அதை காலை வெறும் வயிற்றிலும், இரவு உறங்கச்செல்லும் முன்னும் எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும்.

Thenkai

Thenkais 

நீங்கள் சர்க்கரை வழக்கமாக மாத்திரை, மருந்துகள் அல்லது ஊசிகள் எடுத்துக்கொள்பவர்கள் என்றால், தேன் காய்களை சாப்பிட்ட உடனே அவற்றை நிறுத்த வேண்டாம். இதை சாப்பிட்டு பலன் கிடைக்கிறதா என்று பாருங்கள். பின்னர் படிப்படியாக மாத்திரைகள் எடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி மருந்தை நிறுத்துங்கள்.

இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது என்பதால், பக்கவிளைவுகள் எதுவும் கொடுக்காது. உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கும்.

சர்க்கரை ஆரம்பத்தில் உள்ளவர்கள் மாத்திரை, மருந்துகளின்றி இதை எடுத்துக்கொண்டாலே உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் நோய் முற்றிய நிலையில் இருந்தால் தகுந்த மருத்துவரை நாடுவதே நலம்.

google news