Connect with us

latest news

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தயிர், பால் விலை!.. ஒரு லிட்டர் விலை இதுதான்!…

Published

on

milk

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் முக்கியமானது பால். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அதேபோல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மதிய உணவில் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால், பால் மற்றும் தயிரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது.

வெயில் காலத்தில் தயிர் மற்றும் மோருக்காக பாலின் விற்பனை அதிகரிக்கும். அதுவே, குளிர் காலத்திலும், மழை காலத்திலும் விற்பனை கொஞ்சம் மந்தமாகும். கடந்த பல நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வானிமலை மந்தமாக இருக்கிறது. பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

arokya

இதைத்தொடர்ந்து பால் மற்றும் தயிரின் விலை மந்தமாக இருக்கிறது. எனவே, விற்பனையை அதிகரிப்பதாக ஹட்சன் நிறுவனம் தான் தயாரிக்கும் ஆரோக்யா பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதால், ஆந்திரா, தெலுங்கானா மாவட்டங்களில் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அப்படி கொள்முதல் செய்யப்படும் பாலைத்தான் தனியார் நிறுவனஙக்ள் பாக்கெட் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். ஆரோக்யா பாலின் விலை குறைக்கப்பட்டிருப்பதால் 500 மி.லி., பாலின் விலை ரூ.36 எனவும், ஒரு லிட்டர் பாலின் விலை 68 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், தயில் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *