Connect with us

tech news

`மறந்தும் பண்ணிடாதீங்க பாஸ்’ – வாட்ஸ் அப்பில் செய்யவே கூடாத 7 விஷயங்கள்!

Published

on

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப்-தான் இன்றைய தேதிக்கு உலகில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் ஆப். ஸ்டேட்டஸ்களை பகிர்வது தொடங்கி, மெசேஜிங், வாய்ஸ் மெசேஜ், குரூப் சாட், வீடியோ கால், டாகுமெண்ட் பகிர்தல் என எக்கச்சக்க விஷயங்களை நீங்கள் வாட்ஸ் அப் உதவியோடு செய்ய முடியும்.

ஆனால், வாட்ஸப்பில் செய்யவே கூடாது என சில விஷயங்களை சைபர் ஸ்பெஷலிஸ்ட்கள் பட்டியலிடுகிறார்கள்.

1. நம்பகத்தன்மையற்ற தகவல்களைப் பகிர்தல்

உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் ஒருவேளை நம்பகத்தன்மையற்று உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்று நினைத்தால், அந்தத் தகவல்களைப் பகிர வேண்டாம்.

2. அறிமுகம் இல்லாத நபர்களின் வாட்ஸ் அப் குரூப்கள்

அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸ் அப் குரூப் இன்வைட்டை புறக்கணித்து விடுங்கள். தற்சமயம் பிட்காயின், டிரேடிங் மேசடிகள் பல வாட்ஸ் அப் மூலமாகத்தான் அரங்கேற்றப்படுகிறது.

3. அனுமதியில்லாமல் குரூப்பில் இணைப்பது

ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் உங்கள் நண்பர்/ குடும்பத்தினர்/ தெரிந்தவர்களை இணைக்க விரும்பினால், முறையாக அவர்களிடம் தகவல் சொல்லிவிட்டு, அனுமதி பெற்ற பிறகே இணைக்க வேண்டும்.

4. லிங்குகள்

உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். பரிசு அல்லது ரிவார்டு என ஆசை காட்டி இப்படி வரும் லிங்குகள் மூலம் உங்கள் பெர்சனல் தகவல்கள் திருடப்படலாம் அல்லது உங்கள் மொபைல் போனே ஹேக் செய்யப்படவும் வாய்ப்பு அதிகம்.

5. அதிர்ஷ்டம்

இந்த மெசேஜை 10 பேருக்கு ஃபார்வார்டு செய்தால் உங்களுக்கு அதிர்ஷம் அடிக்கும் போன்ற டேக்லைனோடு வரும் மெசேஜ்களை எக்காரணம் கொண்டும் ஃபார்வார்டு செய்ய வேண்டாம்.

6. டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்

உங்கள் வாட்ஸ் அப் கணக்குக்கான டூ ஸ்டெப் வெரிஃபிகேஷனை எப்போதும் ஆன் பண்ணியே வைத்திருங்கள். அதேபோல், பாதுகாப்புக்காக லேட்டஸ்ட் வெர்ஷனையும் அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

7. ஒன்லி பிளேஸ்டோர் / ஆப்பிள் ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் தவிர்த்து தேர்டு பார்ட்டி இணையதளங்களில் இருந்து வாட்ஸ் அப்பை டவுன்லோடு செய்ய வேண்டாம். அது உங்களின் சைபர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறலாம்.

இதையும் படிங்க:  சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…

google news