Connect with us

latest news

ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில் இதுதான்!..

Published

on

ops

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ்-ஸின் முதல்வர் பதவியையும் சசிகலா பறித்தார்.

இதனால், ஜெயலலிதாவின் சமாதியில் போய் அமர்ந்து தர்மயுத்தம் துவங்கினார் ஒபிஎஸ். அதன்பின் சசிகலா சிறைக்கு சென்றுவிட பாஜகவின் முயற்சியால் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்தார் ஓபி.எஸ். கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது.

ஆனால், கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதை புரிந்து கொண்ட ஓபிஎஸ் அதிமுகவிற்கு எதிராக செயல்பட துவங்கினார். இரட்டை இலை தனக்கே சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பல வகைகளிலும் குடைச்சல் கொடுத்தார் ஓ.பி.எஸ். இதனால் கட்சியின் அடிப்பட்டை உறுப்பினர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்பின் டிடிவி தினகரன், சசிகலா, பாஜக ஆகியோருக்கு ஆதரவாக நடந்து கொண்டார். நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. அதிமுகவும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

எனவே, அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், ‘ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன பழனிச்சாமி ‘அதிமுகவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்?’ என பதிலளித்தார்.

google news