latest news
கள்ளச்சாரயம் அருந்தி 34 பேர் பலி!. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பாஜக!…
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் குடித்திருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதற்கான மூலக்காரணத்தை ஆராய்ந்து அவற்றை கைப்பற்றி அழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஒருபக்கம், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி வருகிற 22ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் தழுவியிஅ ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், பல உயிர்கள் பலியாகும் படி திமுக அரசு மெத்தனப்போக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வேதனை அளிக்கிறது. 1980ல் ஏற்பட்டதை போல தமிழகம் 40 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறதா என்கிற அச்சமும் ஏற்படுகிறது’ என அவர் தெரிவித்திருக்கிறார்.