govt update news
வெளியானது க்ரூப்2 அப்ளிகேஷன்… யார் யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் உள்ளிட்ட முக்கிய தகவல்…
தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குரூப்-2 தேர்வு வாயிலாக உதவி லேபர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 507 காலியிடங்களும், குரூப்-2-ஏ தேர்வு வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளுக்கான வயது வரம்பு, பட்டப்படிப்பு தகுதிகள் அடங்கிய விளம்பரம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன்20) தொடங்கி ஜூலை 19ந் தேதியுடன் முடிவடைகிறது.
முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடக்க இருக்கிறது. பொது அறிவில் 100 கேள்விகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்னரை மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலி பணியிடத்துக்கு 10 பேர் விதம் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வு க்ரூப்2 மற்றும் க்ரூப் 2ஏ என தனி தனியாக நடத்தப்படும். இதுகுறித்து மேலும் தகவலை அறிய www.tnpsc.gov.in இணையத்தில் தெளிவான விளம்பரம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.