latest news
விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது ஆளும் திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை கொடுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். கள்ளச்சாரயம் விற்ற கண்ணுக்குட்டி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. ஒருபக்கம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தமிழக போலீசாரின் விசாரணையே போதும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் பலரையும் கைது செய்திருப்பதால் சிபிஐ தேவையில்லை என தமிழக அரசு சார்பில் வாதாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர், போலிஸ் எஸ்.பி. ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த கருத்தை அதிமுக வழக்கறிஞர் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.