Connect with us

Cricket

இந்திய அணி பயிற்சியாளர் பதவி… கௌதம் கம்பீர் போட்ட 5 கண்டிஷன்கள்!

Published

on

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி நேர்காணல் செய்யப்பட்டிருக்கும் கௌதம் காம்பீர், பிசிசிஐ-க்கு 5 நிபந்தனைகள் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் டீமின் கோச்சாக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பையோடு முடிகிறது. பதவிக்காலத்தை நீட்டிக்க பிசிசிஐ முன்வந்தும் ஒருசில தனிப்பட்ட காரணங்களால், டிராவிட் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, புதிய பயிற்சியாளருக்கான அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ அதற்காக கௌதம் காம்பீர், டபிள்யூ.வி.ராமன் உள்ளிட்ட சிலரிடம் நேர்காணலையும் முடித்திருக்கிறது. இதில், கௌதம் காம்பீர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிசிசிஐ நேர்காணலில் கலந்துகொண்ட காம்பீர், 5 கண்டிஷன்களைச் சொல்லியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

* தன்னுடைய வொர்க்கிங் ஸ்டைலின்படி அணியின் மீது முழு கட்டுப்பாடு வேண்டும். எந்தவொரு குறுக்கீடும் இருக்கக் கூடாது.

* ஃபீல்டிங், பேட்டிங் கோச் உள்பட மற்ற பயிற்சியாளர்கள், நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டும்.

* ஒருநாள் போட்டி ஃபார்மேட்டில் நடக்கும் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்தான் இப்போதைய சீனியர் வீரர்களுக்கான கடைசி வாய்ப்பு. அந்தத் தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

* உள்ளூர் தொடர்களில் நல்ல பெர்ஃபாமன்ஸ் காட்டும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வொயிட் ஃபால் பார்மேட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக டெஸ்ட் டீமைத் தேர்வு செய்ய வேண்டும்.

* பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற உடனேயே 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்யத் தொடங்கி விடுவேன். இதற்கு ஒத்துவராத வீரர்களுக்கு அணியில் இடமில்லை.

இதையும் படிங்க: பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை.. ஒரு கோடி அபராதம்.. அமலுக்கு வந்த புதிய சட்டம்!

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *