india
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆப்சென்ட்.. நீட் மறு தேர்வில் குளறுபடி உண்மையா?..
மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. பல மாநிலங்களிலு எதிர்ப்பு எழுந்தும் பாஜக அரசு பின் வாங்கவில்லை. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவின் மரணமும் மத்திய அரசை உலுக்கவில்லை.
தற்போது நீட் தேர்வு தமிழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் நீட் தேர்வு நடந்தது. ஆனால், அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பீகார், சத்தீஸ்கர் பகுதிகளில் பல முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்பட்டது.
எனவே, கருணை மதிப்பென் வழங்கப்பட்ட 1563 பேருக்கு நாடு முழுவதும் 7 தேர்வு மையங்களில் நேற்று மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், 813 பேர் மட்டுமே மறு தேர்வு எழுந்த வந்தனர். மீது 48 சதவீதம் பேர் மறு தேர்வு எழுத வரவில்லை. இதில், சத்தீஸ்கரில் 70 பேர் தேர்வு எழுத வரவில்லை. எனவே, தேர்வு எழுத வராத மாணவர்கள் முறை கேடுகளில் ஈடுபட்டார்கள் என சிபிஐ விசாரிக்கவுள்ளது.
குறிப்பாக அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன்? தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.