Connect with us

latest news

என் நெஞ்சில் குடி இருக்கும்… தலைவராக முதல் பிறந்தநாளை முடித்த விஜய்.. வெளியிட்ட திடீர் அறிக்கை…

Published

on

நடிப்பில் இருந்தும் விலகி அரசியலுக்குள் நுழைய இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் கட்சியை தொடங்கி தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன்.

இதையும் படிங்க:  தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வைக்கப்படும் குறி… டேட்டிங் செயலிகளால் பெருகும் ஆபத்து…

பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை, எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த ஆளுமைகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். தலைவராக முதல் பிறந்தநாளில் தனக்கு வாழ்த்திய அனைத்து அரசியல் ஆளுமைகளையும் விடாமல் நன்றி தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ட்வீட்டைக் காண: https://x.com/tvkvijayhq/status/1805190393019224181

 

google news