Connect with us

india

அதிக முறை தோப்புக்கரணம்!.. ராக்கிங் கொடுமையால் மருத்து கல்லூரி மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு!..

Published

on

ragging

ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் சில கல்லூரிகளில் ராக்கிங் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஒரு மாணவரை சீனியர் மாணவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கல்லூரியில் சேர்ந்த்து முதலே தொடர்ந்து ரேக்கிங் செய்துள்ளனர். ஆனால், இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்காமல் அவர் இருந்திருக்கிறார்.

கடந்த மே 15ம் தேதி அந்த மாணவரை சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 முறை அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பின்னரே கடந்த 20ம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு ஆன்லைன் புகார் வந்திருக்கிறது. இதுபற்றி விசாரித்தபோது இந்த ராக்கிங் விஷயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

எனவே, இதுபற்றி விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் 7 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவனின் உடல்நிலை இப்போது நன்றாக இருப்பதாகவும், கல்லூரிக்கு அவர் வர துவங்கியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

google news