india
7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமன்னா வாழ்க்கை குறிப்பு… மாநிலம் முழுவதும் கிளம்பும் எதிர்ப்பு…
கர்நாடகா மாநிலத்தின் 7வது பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை வரலாறை பதிவாகி இருக்கும் விஷயம் தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகாவின் பெங்களூரில் இருக்கும் ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த பாடம் இடம் பெற்று இருக்கிறது. அதில் தமன்னா பாட்டியா மற்றும் இந்தி நடிகர் ரன்வீர் சிங் குறித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இத்தகவல் பெற்றோர்களுக்கு தெரிய வர பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வராத நிலையில் பள்ளியில் பிரின்சிபாலிடம் பிரச்னையை கொண்டு வந்தனர். அவர் அளித்த விளக்கமும் திருப்தி அளிக்காத நிலையில் பெற்றோர்கள் இப்பிரச்னைக்கு அப்பாடத்தினை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சில பெற்றோர்கள் தமன்னா குறித்த பாடத்தினை நீக்கவில்லை என்றால் பள்ளியில் இருந்து பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி தரப்பில் இருந்து, சிந்து மக்களின் வாழ்க்கை குறித்து விளக்கவே தமன்னா குறித்த பாடத்தினை சேர்த்தோம். இதில் எந்த குளறுபடியும் இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.