Connect with us

job news

மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…

Published

on

vijay

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

vijay

மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.

விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.

google news