Connect with us

india

ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி NET தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு….

Published

on

exam

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவ்வி பேராசியர வேலைக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஆனால், இந்த தேர்வில் நிறைய முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

எனவே, தேர்வு எழுதிய மாணவர்களில் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலைய்ல், வருகிற ஆகஸ்டு 21ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நெட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. கடந்த முறை இந்த தேர்தல் செண்டர்களில் (ஆஃப் லைன்) நடத்தப்பட்டது. இந்த முறை கம்ப்யூட்டர் மூலம் நடக்கவிருக்கிறது. இதன் மூலம் முறைகேடு நடக்காமல் தடுக்க முடியும் என தேசிய தேர்வு முகமை நம்புகிறது.

சில நாட்களுக்கு முன்பு நாடெங்கும் நீட் தேர்வு நடந்தது. ஆனால், அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக பீகார், சத்தீஸ்கர் பகுதிகளில் பல முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்பட்டது. எனவே, கருணை மதிப்பென் வழங்கப்பட்ட 1563 பேருக்கு நாடு முழுவதும் மறு தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், அதில் 813 பேர் மட்டுமே மறு தேர்வு எழுந்த வந்தனர். மீது 48 சதவீதம் பேர் மறு தேர்வு எழுத வரவில்லை. இதில், சத்தீஸ்கரில் 70 பேர் தேர்வு எழுத வரவில்லை. எனவே, தேர்வு எழுத வராத மாணவர்கள் முறை கேடுகளில் ஈடுபட்டார்கள் என சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

google news