Connect with us

latest news

6 மாதம் தலைமறைவு; இஸ்திரி தொழிலாளி – கோயம்பேடு ஹோட்டலில் தீவிரவாதி வளைக்கப்பட்டது எப்படி?

Published

on

சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

அன்சர் அல் இஸ்லாம்

மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனோகர். இவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர் என்றும் அன்சர் அல் இஸ்லாம் என்கிற இயக்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தவர் என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.

மேற்குவங்க மாநிலத்தில் இவர் மீது, இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல், தாக்குதல் நடத்தத் திட்டமிடுதல் மற்றும் அரசுக்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறிய அனோகர் தமிழகத்தில் தலைமறைவாகியிருக்கிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கிராண்ட் டவர் ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளி வேடத்தில் கடந்த 6 மாதங்களாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.

இந்தநிலையில், அனோகரின் கூட்டாளி ஹபிபுல்லா என்பவரை மேற்குவங்க போலீஸார் சமீபத்தில் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அனோகர் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சென்னை வந்த மேற்குவங்க தனிப்படை போலீஸார், சென்னை போலீஸாரின் உதவியோடு அனோகரை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி NET தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு….

google news