tech news
கூகுள் சர்ச்-இல் ஸ்னேக் கேம் விளையாடலாம் – எப்படி தெரியுமா?
செல்போன்கள் பரவலான காலக்கட்டம், 90-ஸ் கிட்ஸ் மனங்களில் இன்றும் அலாதியான உணர்வை ஏற்படுத்தும் கேம்களில் ஒன்று ஸ்னேக் கேம் (Snake Game). நோக்கியா செல்போன்களில் இந்த ஸ்னேக் கேம் மிகவும் பிரபலமாக இருந்தது. அனைவராலும் எளிதில் விளையாடக்கூடிய கேம் இது.
இதுமட்டுமின்றி ஸ்னேக் கேம் விளையாடுவோருக்கு அதிக சுவாரஸ்யத்தை வழங்கும். அதிநவீன கிராஃபிக்ஸ், கண்கவர் நிறங்கள் என எதுவும் இல்லாமலேயே ஸ்னேக் கேம் அனைவரின் மனங்களை வென்றுள்ளது. இன்றும் இந்த கேமை விளையாடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்கின்றனர்.
இத்தகைய பிரபலமான ஸ்னேக் கேமினை கூகுள் சர்ச்-லேயே விளையாட முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கேம் விளையாட அதனை டவுன்லோட் செய்யவோ, இதற்கென தனி பிளேயர் அல்லது ஃபைல்களை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
அந்த வகையில், ஸ்னேக் கேமை கூகுள் சர்ச் பாரில் இருந்த படி எப்படி விளையாடலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
- இதற்கு உங்களது பிரவுசரில், கூகுள் சர்ச்-ஐ முதலில் திறக்க வேண்டும்.
- சர்ச் பாரில் ஸ்னேக் (Snake) என்று பதிவிட்டு எண்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி சர்ச் ரிசல்ட்களின் மேல்புறத்திலேயே ஸ்னேக் கேம் விளையாடும் வகையில் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
- அதில் உள்ள பிளே (Play) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
- இனி கீபோர்டில் உள்ள ஏரோ பட்டன்களை (Arrow Keys) க்ளிக் செய்து ஸ்னேக் கேம் விளையாட துவங்கலாம்.